ராஜாஜி ராஜகோபாலனின் குதிரை இல்லாத ராஜகுமாரன்
ராஜாஜின் இந்த தொகுப்பை முன்பே ரசித்து படித்தேன் .இதைப்பற்றி ஓர் வாசிப்பு அனுபவம் எழுதவேண்டும் என்று அடிக்கடி எண்ணினாலும், எனது எழுத்துச் சோம்பலும் தினசரி அலுவல்களும் தடைபோட்டவண்ணமே இருந்தன.சென்றகிழமை , ராஜாஜி நான் இதைப் பற்றி எழுதுவேன் என்று சொன்னதை ஞாபகப்படுத்தி ஓர் செய்தி அனுப்பி இருந்தார்.
"திங்கள் பதிகிறேன்" என்று சொல்லி இன்று வியாழன் ஆகிவிட்டது. ஊர்த் துளவாரங்களும் அன்றாடவேலைகளும் வாசிக்கவோ எழுதவோ நேரமில்லாமல் செய்கின்றன. இதோ நள்ளிரவு 11.30 இற்கு இப்பதிவை தொடங்குகிறேன் ஒவ்வொரு எழுத்தாக தொட்டுப்பதிய அதிகாலை 2 மணியாகிவிடும். ஆனாலும் மற்றவர்களின் படைப்பை பற்றிய வாசிப்பு அனுபவம் பற்றிய பதிவு ஓர் சுவையானதே.
ராஜாஜியின் இத்தொகுப்பில் 15 கதைகள் உள்ளன. 10 த்திற்க்கு மேற்பட்ட கதைகள் சுவாரஸ்யமானவை. இன்று வகை தொகைன்றி வந்து குவியும் கதைகளோடு ஒப்பிடுகையில் இவை தூக்கலாக தெரிகின்ற கதைகள் என்பது சிறப்பானதே .
ராஜாஜியின் நுணுக்கமான பார்வை, பெண்களைப்பற்றிய வர்ணிப்பில் காணப்படும் எழிலார்ந்த இரசனை, சூழல் பற்றி நுணுகிப்பார்க்கும் பண்பு என்பன சில இடங்களில் ஜானகிராமனை நினைவூட்டுகிறது.
முதலாவது கதை 'மேலும் சில கேள்விகள் ' பழைய காதலியை சந்திக்க 15 வருடங்களின் பின் செல்கின்ற ஓர் உண்மைக் காதலனின் ரொமான்ரிக்கான கதை. பெண்களின் அங்கங்கள் பற்றிய விரசமில்லாத வர்ணனை சுவையாய் இருக்கிறது
2) பௌருஷம்
உண்மையிலே இக்கதை எனக்கு நன்கு பிடித்தது. பௌருஷம் நிரம்பிய ஓர் ஆண்மகனின் பண்பான நடத்தையில் தன்னை இழக்கின்றன ஓர் பாவப்பட்ட பாலியல் தொழிலாளியின் கதை. கதையின் முடிவு சிறப்பாக அமைகிறது.
அவருக்கே உரித்தான சில விபரிப்புகள் சிறப்பாய் அமைகின்றன.
உ+ம்: ஜனச்சிதறல்களை உஷார்ப்படுத்தியவாறு வந்து நின்றது அழுத்கம ரயில் .
3) பத்தியம்
உ+ம்: ஜனச்சிதறல்களை உஷார்ப்படுத்தியவாறு வந்து நின்றது அழுத்கம ரயில் .
3) பத்தியம்
காலத்தின் கடுகதி மாற்றத்தை ஓர் ஏழை ஆயுர்வேத வைத்தியரை வைத்து அழகுற சொல்கிறது இக்கதை. பட்டினிக்கிடக்கிற வைத்தியரின் பணத்துக்கு மயங்காத கெத்து கதையின் சிறப்பு. ஆயுர்வேத வைத்தியத்தின் உயர்வு பற்றி விபரிக்கும் பாங்கில் தி . ஜா சாடை காட்டுகிறார்
4) விழிப்புகள்
4) விழிப்புகள்
மொழியழகின் லாவகத்தோடு விபத்தில் சிக்கி இறக்கப்போகும் ஒருவனின் தத்துவ விசாரத்தை சிறப்புடன் சொல்கிறது. இது நீல பத்மநாதனின் வாசிப்பு அனுபவத்தை தந்தது. பக்கம் 64 இல் வருகின்ற இந்த வரிகள் என்னைக் கவர்ந்தன:
"மனிதர்கள் துறவிகளாகிவிடாதபடி எத்தனை கண்காணிப்புகள்!
இந்த உலகத்தின் மீதான பிணைப்பு.
பொருள்களின்மீதான பேராசை,
மாந்தர்களின் பாசம்,
பெண்களின் போதை ---- " என்று நீண்டுசெல்கின்ற தத்துவ விசாரம் எனக்கு பிடித்திருந்தது.
5) கறுத்தக்கொழும்பான் .
என்னைக் கவர்ந்த இன்னுமோர் சிறப்பான கதை . கிராமத்து உறவுகளின் அன்பு, கோபம், உதவி, என்பனவற்றை கிராமிய சொற்களில் அழகுற விபரிக்கும் கதையிது. இக்கதையை படிக்கும்போது க .சட்டநாதனின் கதைகளைப் படித்த உணர்வு வந்தது.
இதில் உள்ள, உருத்தி, தனிவிளாப்பிலை, சிறங்கை, நிறுதூழி போன்ற சில கிராமத்து சொற்கள் மண் மணம் வீசுகின்றன.
6) அந்த ஒருவனைத் தேடி
கனடா வாழ்க்கை முறையைச் சொல்லும் கதையிது. நன்கு படித்த திருமணமாகாத இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர் பற்றிய கதை, வேதனையோடும் நகைச்சுவையோடும் நகர்கிறது.
மொத்தத்தில் நீங்களும் படித்துப் பார்க்கவேண்டிய வித்தியாசமான கதைகள் .
January 25, 26, 27 திகதி யாழ் முற்ற வெளியில் நடைபெறும் எங்கடை புத்தகங்கள் கண்காட்சியில் இப்புத்தகத்தை பார்வையிடலாம் .
மற்றைய கதைகள் பற்றிய அனுபவ பதிவு பிறிதொரு நாளில்.
மொத்தத்தில் நீங்களும் படித்துப் பார்க்கவேண்டிய வித்தியாசமான கதைகள் .
January 25, 26, 27 திகதி யாழ் முற்ற வெளியில் நடைபெறும் எங்கடை புத்தகங்கள் கண்காட்சியில் இப்புத்தகத்தை பார்வையிடலாம் .
மற்றைய கதைகள் பற்றிய அனுபவ பதிவு பிறிதொரு நாளில்.

No comments:
Post a Comment